25 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் தனது லோகோவை மாற்றியுள்ளது.

0 comments

25 வருடங்களுக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனது பிரதான லோகோவை மாற்றியுள்ளது. நான்கு வர்ணங்களைக் கொண்ட பெட்டிகளையும் அதனோடு தொடர்ந்து வரும் Microsoft என்ற இலகுவான எழுத்துருக் கொண்ட சொல்லையும் சேர்த்து அதன் புதிய லோகோவை உருவாக்கியுள்ளது.
தங்களது எதிர்கால திட்டங்களை குறிப்பதாகவும் புதிய தன்மையையும் இந்த லோகோ குறிப்பதாக தெரியவருகின்றது. விண்டோஸ் லோகோவைப் போன்றே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் Outlook.com ஐ அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய ஒரு மென்பொருள்

0 comments

இமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். இந்த போட்டோ அல்லது இமேஜ் எடிட்டர் அல்லது பைல் வியூவர்களை கொண்டே காண முடியும். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும். நாம் இதுவரை வேர்ட் பைல்களை மட்டுமே பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்து வந்தோம், அவ்வாறு இல்லாமல் நமக்கு பிடித்த இமேஜ்களையோ அல்லது முக்கியமான படங்களையே பிடிஎப் பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும். 


நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம், ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.

இமேஜ் to பிடிஎப் சுட்டி


இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும், மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது ஆகும்.
Related Posts with Thumbnails